Course Details













பாடநெறி விவரம் :
·    40 நாள்
·    80 நாள் 
·    1 வருடம்
                என்று மூன்று விதமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றது .

மர்க்கஜ் அல் – இஸ்லாஹ் - ன்
40-நாட்கள் தர்பிய்யத் வகுப்புகளில் நடைபெறும்
வழமை காரியங்களின் அட்டவணை & சிறப்பு அம்சங்கள்
PRACTICAL TRAINING COURSE
PROGRAM-CHART & SPECIAL FEATURES

01.   ஒவ்வொரு நாளும் நடத்தப்படும் பாடங்களை (கொடுக்கப்படும்
   பயிற்சிகளை) மனனம் செய்து மறுநாள் ஒப்பிக்க வேண்டும்.

02.   வாரத்திற்கு ஒருமுறை (ஞாயிறு) தலைமை பொறுப்பாளர் (CHIEF EXAMINER)      
   மேற்பார்வையில் அந்தந்த பாடநேரங்களில் எழுத்துமுறை தேர்வு (Weekly Test) நடத்தப்படும்.

03.   ஒவ்வொரு 6 நாட்களுக்கு ஒரு நாளோ (அ) இரண்டு நாட்களோ கௌரவ பேராசிரியர்களின்
   மூலம் அத்தியாவசியமான துறைகளில் (அட்டவணையில் உள்ளபடி) பயிற்சியளிக்கப்பட்டு  
   உற்சாகப்படுத்தப்படும்.

04. கௌரவ பேராசிரியர்கள் (VISITING PROFESSORS) அன்றி அவ்வப்பொழுது பல  
   துறைகளில் அனுபவமும் நிபுணத்துவமும் பெற்று சிறந்து விளங்குபவர்களை சிறப்பு
   விருந்தினர்களாக (GUEST LECTURER) பிறத்தியேகமாக அழைத்து ஊக்குவிக்கப்படும்.

05. அரபி, உருது, தமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழி  
   புத்தகங்களை (கொண்ட சிறந்த நூல் நிலையத்தை பார்வையிட்டு) படித்து பயன்பெற
   (பாடங்களுக்கு இடையூறு இன்றி) என்நேரமும் (பயன்பாட்டுக்கு) திறந்து வைக்கப்படும்.

06.   புரஜெக்டர் (Projector), இன்டர்னெட் (INTERNET) வசதியுடன் கூடிய கணிணியகம்
    (Computer Lab) அதற்கான குறிப்பிடப்பட்டுள்ள நேரங்களில் மாணவர்கள் பயன்பாட்டுக்கு  
    (அனுமதிக்கப்படும்).

07. உடல்நலக் குறைவு ஏற்பட்டால் தக்க சிகிச்சை அளிக்கப்படும் மூன்று நேர டீ, பிஸ்கட்,
   மூன்று வேளை சிறந்த உணவு, தங்க நல்ல இடவசதி இவை முற்றிலும் இலவசமாக
   வழங்கப்படும்.
08.   ஒவ்வொரு மாணவரும், பயிற்சிகளுக்கு கொடுக்கப்படும் கட்டுரைகளன்றி, 40 நாட்கள் தர்பிய்யத் வகுப்புகள் நிறைவடைவதற்குள் கொடுக்கப்படும் நல்ல, சிறந்த தலைப்பில் நூல் வடிவிலான ஒரு ஆய்வு கட்டுரையை தயாரித்து சமர்ப்பிக்க வேண்டும்.  (அதற்கு அவர்கள் சங்கைகுரிய பேராசிரியர்களையும் சிறந்த நூல்நிலையத்தையும், இன்டர்னெட் வசதியுடன் கூடிய கணினியகத்தையும் உதவிக்கு பயன்படுத்திக்கொள்வார்கள்.

09.   “தர்பிய்யத் (பயிற்சி) நடக்கும் 40-நாட்களில் வரும் அய்யாமுல் பீள் - 131415 ஆகிய மூன்று பிறை நாட்களிலும் நோன்பு நோற்பது அவசியமாகும்.  (ஸஹர், இஃப்தாருக்கு சிறந்த உணவு ஏற்பாடு செய்து தரப்படும்).

10.   40 நாட்கள் தர்ப்பியத் வகுப்பின் இறுதியில் தமிழகத்தின் (ஏதேனும்) ஒரு மூத்த ஆலிம் பெருந்தகையைக் கொண்டு இறுதி தகுதித் தேர்வு (Final Fitness Exam) எல்லாப் பாடங்களிலும் நடத்தப்படும்.

11.   40 நாட்கள் நிறைவடையும் பொழுது மாணவர்கள் மர்க்கஜ் அல்-இஸ்லாஹின் தர்பிய்யத்தை முழுமையாக நல்ல முறையில் பயன்படுத்தி, தஜ்வீது முறைப்படி ஓதக்கூடிய நல்ல காரியாகவும், சிறந்த பேச்சாளராகவும், தேர்ந்த எழுத்தாளராகவும், அழகிய முறையில் தஃவா பணி செய்யும் அழைப்பாளராகவும் - உம்மத்தே முஹம்மதியாவுக்கு பயன்தரும் - ஒரு சிறந்த முன்மாதிரி ஆலிமாக ஆகி அதற்கான தகுதிச்சான்றைப் பெற்றவர்களாக சமுதாய சேவையில் தகுதிமிக்க தீன் சேவகராக உலாவருவார்.
குறிப்பு :  தகுதிக்கு ஏற்ற ஊக்கத் தொகையும், சான்றிதழும் வழங்கப்படும்.
(இன்ஷா அல்லாஹ்)

மர்க்கஜ் அல்-இஸ்லாஹ்-ன்
தர்பிய்யத் வகுப்புகளின்
அன்றாட அட்டவணை
(Daily Time Table)
காலம்
நேரம்
நிகழ்வுகள்
காலை
4.00 - 5.00
தஹஜ்ஜத் தொழுகை பஜ்ர் பாங்கு சொல்லப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு எழுதல்.
காலை
5.00 - 5.30
பஜ்ர் தொழுகை – (பாங்கு சொன்னதிலிருந்து ½ மணி நேரத்திற்குள் தொழுகை தொடர்பிலான அமல்கள் அனைத்தும் நிறைவு செய்தல்)
காலை
5.30 – 5.40
டீ-டைம்
காலை
5.40 - 5.45
கிராஅத் பாடத்தில் (ஓதி) பயிற்சி கொடுக்கப்பட இருக்கும் திருவசனங்களின் பொருள்கள் வாசிக்கப்படும்.
காலை
5.45 - 6.45
கிராஅத் பாடம் (காரி ஹளரத் அவர்கள் தஜ்வீத் - தர்த்தீல் - விளக்கத்துடன் - முறைப்படி 15 திருவசனங்களை ஓதுவார்கள்.  மாணவர்கள்   ஒவ்வொருவராக அவற்றை மஷ்க் முறையில் ஓதிப்பழகவும், (பழக்கப்படவும்) செய்தல்
காலை
6.45 – 7.00
இஷ்ராக் தொழுகை
காலை
7.00 – 8.30
காலைக்கடன் - குளியல்
காலை
8.30 - 8.45
காலை நாஷ்டா
காலை
8.45 – 9.00
லுஹா தொழுகை
காலை
9.00 – 9.30
முந்தைய நாள் படித்த மனனம் செய்த பாடங்களை நினைவுப்படுத்திக்கொள்ளுதல்
காலை
9.30 – 10.30
தப்ஸீர் - ரூஹுல் பயான் - (உஸ்தாத் (அவர்கள்) நடத்தும் பாடத்தை மாணவர்கள் குறிப்பு எடுத்துக்கொண்டு, அவற்றை விரிவாக எழுதிக்காட்டுதல்.
மௌலானா s.s.அப்துல்காதிர் அவர்கள் எழுதிய தமிழ் மொழிபெயர்ப்பு தப்ஸீரை முதாலஆ செய்து கொள்ளலாம்)
காலை
10.30 – 10.45
டீ-டைம்
முற்பகல்
10.45 – 12.00
ஃபிக்ஹ் - அல் ஃபிக்ஹுல் முயஸ்ஸர்”.  (தப்ஸீர் பாடத்தை போன்று உஸ்தாத் நடத்துவதை குறிப்பு எடுத்துக்கொண்டும், விரிவாக எழுதியும், தேவையானவற்றை மனனம் செய்தும் ஒப்பித்தல்.
பகல்
12.00 – 1.00
ஓய்வு – (சுய தேவை)
மதியம்
1.00 – 1.20
லுஹர் தொழுகை
மதியம்
1.20 – 2.00
மதிய உணவு
மதியம்
2.00 – 2.30
முந்தைய நாள் படித்த பயிற்சி செய்த மனனம் செய்த பாடங்களை நினைவுபடுத்திக்கொள்வது
மதியம்
2.30 – 3.30
தாரீக் (வரலாறு) நபி(ஸல்), குலபாக்கள் வரலாறு, இந்திய வரலாறு
மதியம்
3.30 – 4.45
கம்ப்யூட்டர் (Computer) கணினியை இயக்கக் கூடிய முறை, அவற்றிலிருந்து குர்ஆன், ஹதீஸ், பயான், கட்டுரை   போன்றவற்றிற்குத் தேவையான குறிப்புகளை எடுக்கும் முறைபோன்ற   அத்தியாவசியமான புரோகிராம்கள் கற்றுக்கொடுக்கப்படும்.
மாலை
4.45 – 5.10
அஸர் தொழுகை
மாலை
5.10 – 5.20
டீ-டைம்
மாலை
5.20 – 6.15
பயான், கட்டுரை, போன்றவை தயாரிக்கவும் நோட்ஸ் - குறிப்புகள் எடுக்கவும் இந்நேரத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
(நூல் நிலையத்ததையும், கம்ப்யூட்டரையும் இவற்றிற்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.
இரவு
6.15 – 8.00
மஃக்ரிப் தொழுகை, அவ்வாபீன் தொழுகை போன்ற தொழுகைகளில், மனனம் செய்துள்ள சூராக்களை காரி ஹளரத்தின் மேற்பார்வையில் மஷ்க் (பயிற்சி) செய்யும் முறையில் ஓதிப் பழகுதல்   (இமாம்-மஃமூம் அடிப்படையில் ஜமாஅத்தாக தொழுதல்).
இரவு
8.00 – 8.25
இஷா தொழுகை
இரவு
8.25 – 9.00
இரவு உணவு
இரவு
9.00 – 10.00
ஹதீஸ் - திர்மிதி – “இல்மு, “ஈமான்,மாயில், “ஈமானிய்யாத், அர்கானுல்   இஸ்லாம் நீங்கலான பாடங்களில் வகுப்புகள் நடத்தப்படும்.  (இந்த பாடத்திலும் தப்ஸீர், ஃபிக்ஹ் பாடங்களில் செய்தது போன்று குறிப்பெடுத்து, எழுதி, மனனம் செய்து ஒப்பித்தல்

No comments:

Post a Comment